Rajendra Singh bediyin Thernthedutha Sirukathaikal / ராஜேந்திர சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-
₹330
- SKU: SA0006
- ISBN: 9789355481399
- Translator: Jai Ratan
- Author: Rajendra Singh bedi
- Language: Tamil
- Pages: 440
- Availability: In Stock
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் : சதாத்ஹசன் மண்டோ, க்ரிஷன்சந்தர் மற்றும் ராஜிந்தர் சிங் பேடி
இம்மூவரும் 20ஆம் நூற்றாண்டின்
உருது இலக்கிய முக்கோணத்தை உருவாக்கியவர்கள். இவர்களில் மண்டோ உலகப் புகழ் பெற்று
விட்டாலும், அந்தத்
தலைமுறையின் தலைசிறந்த எழுத்தாளராகவும், முன்னோடியாகவும் திகழ்ந்தவர் பேடி. வாசகர்களின் நுண்ணறிவைத் தூண்டுவதாகவும்,
மனிதநேயத்தைப்
பெருக்குவதாகவும், வாசித்து
இன்புறும் வகையில் அமைந்துள்ளன இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள். அனைத்து
கதாபாத்திரப்படைப்புகளும் சிறப்பாக இருந்தாலும், பேடி பெண் கதாபாத்திரங்களை புத்தர் உள்ளம்
கொண்டு இரக்கத்துடனும் நயத்துடனும் படைத்துள்ளார். உருது மட்டுமென்றிலாது 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சிறுகதைகள்,
போற்றப்பட்ட கதைகள்
இத்தொகுப்பில் உள்ளன.
கோபிசந்த் நாரங் : நவீன இந்திய இலக்கியத்தின் தலைசிறந்த குறிப்பாக உருது
இலக்கியத்தின் விமர்சகர், தத்துவவாதி,
ஆங்கிலம் மற்றும் உருது
மொழிகளில் தலைசிறந்த எழுத்தாளர்,
மொழிபெயர்ப்பாளர், பின்கட்டமைப்புவாதம்
மற்றும் பின்நவீனத்துவம் போன்ற புதிய சித்தாந்தங்களை உருது இலக்கியத்திற்கு
அறிமுகப்படுத்திய அறிஞர் என்று பல தளங்களிலும் தன் முத்திரையைப் பதித்தவர். உருது
மற்றும் ஆங்கிலத்தில் கவிதை, புனைகதை, ஆராய்ச்சி, விமர்சனப்படைப்புகள் மற்றும் மொழியியல் உட்பட 70க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படைத்தவர்.
சாகித்திய அகாதெமி விருது, ஞானபீட விருது,
பத்மஸ்ரீ, பத்மபூஷன் என மிகச்சிறந்த விருதுகள் மற்றும்
கௌரவங்களைப் பெற்றவர்.
முனைவர் எஸ். கனகராஜ், மதுரை காமராசர்
பல்கலைக்கழகம், அஞ்சல் வழிக்
கல்வி இயக்ககத்தில் முதுநிலை ஆங்கிலப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராகப்
பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், மொழிபெயர்ப்புக் கலை பற்றி இரு நூல்களும் எழுதி
வெளியிட்டுள்ளார். பல்வேறு உள்நாடு-வெளிநாடு கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளைச்
சமர்பித்தவர்.

